"100-ஐத் தொடும் 2026 தமிழ் சினிமா ரிலீஸ்.
2026ஆம் ஆண்டு மே மாதம் வரை வெளியான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 96-ஐத் தொட்டுள்ளது. இந்த வாரம் ஜூன் 5ஆம் தேதி, 'பரிமளா அண்ட் கோ', 'இரட்டையர்', 'சம்ஹாரம்', 'சன்னிதானம் பி.ஓ' ஆகிய 4 படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றுடன் சேர்த்து நடப்பு ஆண்டின் மொத்தப் படங்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டுகிறது. கடந்தாண்டு மே மாதம் வரை 110 படங்கள் ரிலீஸாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு படங்களின் எண்ணிக்கை சற்று குறைவு தான்.
0
Leave a Reply